International
இலங்கை

வெள்ளத்தில் மூழ்கிய வட்டுக்கோட்டை வீடுகள்!

இலங்கை வட பகுதியின் பல்வேறு இடங்களிலும் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வட்டுக்கோட்டை முள்ளிப்பகுதியும் வெள்ளக்காடாகியுள்ளது

கடந்த வருடங்களை போன்று இந்த ஆண்டும் பல்வேறு பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.

அந்த வகையில் வட்டுக்கோட்டை முள்ளிப்பகுதியில் வெள்ளம் வீடுகளிற்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று பிரச்சினை நீடிப்பதாகவும், மழை வந்தால் தமது வாழ்க்கை போராட்டமாகவே அமைகிறது என்றும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறமைக்கு வடிகாலமைப்பு இல்லாமையே காரணம் என்றும், இது தொடர்பில் பிரதேச சபையில் பலமுறை முறைப்பாடு செய்தும் எந்த பலனும் இல்லையென்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒவ்வொரு நகரசபையிலும் ஒவ்வொரு உறுப்பினர்களை பிரதேச மக்கள் தெரிவு செய்திருக்கும் நிலையில், அவர்கள் முன்னின்று இப்படிப்பட்ட பொதுவான சமூக பிரச்சினைகளும் தீர்வு பெறவில்லை என்றால், எத்தனை தலைமைகள் வந்தும் பலனில்லை என்பது பாதிக்கப்படும் மக்களின் கருத்து

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!