International
மலேசியா

1எம்டிபி விவகாரம்; சிங்கை மத்திய வங்கி போலீசில் புகார்!

கோலாலம்பூர், நவ.9- கடந்த 5-ஆம் தேதியன்று, சிங்கப்பூர் மத்திய வங்கி மீது பொய்யான, தீய எண்ணம் கொண்ட செய்தி வெளியாக்கப் பட்டதை தொடர்ந்து, www.statestimesreview.com என்ற வலைத்தளத்திற்கு எதிராக அவ்வங்கி போலீஸ் புகார் செய்துள்ளது.

அந்த வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அந்த வலைத்தள பக்கம், பொய்யான, அடிப்படையற்ற செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது என்று அந்தப் போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.

“1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூனிடம் விசாரணை-பண ஊழலை மறைப்பதற்காக, லீயுடன் பல நியாயமற்ற ஒப்பந்தங்களில் நஜிப் கையெழுத்திட்டுள்ளார்” என்ற தலைப்பில் அந்த செய்தித் தளம் செய்திகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“1எம்டிபி பண பரிமாற்றம் விவகாரம் தொடர்பில், சம்பந்தப் பட்டுள்ளதாக நம்பப்படும் சிங்கப்பூர் வங்கிகள் மற்றும் வங்கியாளர்கள் மீது, சிங்கப்பூரின் மத்திய வங்கிதான் முதன் முதலாக நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை அந்த வலைத்தளம் மறந்து விட்டது போலும்.

“அதுமட்டுமல்லாது, மலேசியாவின் தலைமைத்துவம் மாறியதால் தான், சிங்கப்பூர் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மீண்டும் விசாரணையை நடத்தியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1எம்டிபி தொடர்பிலான விசாரணை என்றும் நிறுத்தப் படவில்லை என்பதை இங்கு தெரிவிக்கிறோம்” என்று சிங்கப்பூரின் மத்திய வங்கி அறிக்கையில் கூறியுள்ளது.

“எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் தரப்பினர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று அந்த வங்கி கூறியுள்ளது.

The post 1எம்டிபி விவகாரம்; சிங்கை மத்திய வங்கி போலீசில் புகார்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!