International
மலேசியா

100 மீட்டர் கால்வாயில் மாட்டிக் கொண்ட நாய் மீட்பு!

கோலாலம்பூர், ஜன.10- கால்வாயில் தவறி விழுந்து திரும்ப மேலே வர முடியாமல் தவித்த நாயை ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு, மீட்புப் படையினர் வெற்றிகரமாக காப்பாற்றி கொண்டு வந்தனர்.

நேற்றிரவு செராஸ், தாமான் ஷாஜெயா-ஜாலான் 6-இல் உள்ள மூடியப்படி இருக்கும் கால்வாயில் அந்த நாய் எப்படியோ விழுந்து மாட்டிக் கொண்டது.

அந்நாய் கால்வாயில் மாட்டிக் கொண்டதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாக பாண்டார் துன் ஹுசேன் ஓன் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் அக்மால் தெரிவித்தார்.

சுமார் 100 மீட்டருக்கு மூடியவாறு இருந்த கால்வாயிக்குள் அந்த நாய் இருந்ததால், மீட்புப் படையினர் சுவாசக் கருவிகளை மாட்டிக் கொண்டு கால்வாய்க்குள் நுழைந்ததாக அவர் கூறினார்.

அந்நாய்க்கு இடது காலின் எலும்பு முறிந்திருந்தாம். எப்படியோ அதனை மீட்புப் படையினர் பல சிரமங்களுக்கு இடையில் கால்வாயில் இருந்து வெளியேற்றினராம். எனினும், கால்வாயில் இருந்து வெளியேறிதுதானாம், “அப்பாடா, தப்பித்தோம் பிழைத்தோம்” என்று அந்த நாய் அங்கிருந்து ஓடியே போய்விட்டதாம்.

The post 100 மீட்டர் கால்வாயில் மாட்டிக் கொண்ட நாய் மீட்பு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!