International
இலங்கை

2018ம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கவனத்திற்கு…!!

2018ம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் முகவர் புத்தகக் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டை விட மேலதிகமாக ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!