International

Obituaries

மரண அறிவித்தல் பற்றிய தகவல்கள்

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய தமிழ் பிரான்சில் மரண அறிவித்தலை பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும். இங்கு உங்களது அறிவித்தல்கள் அனைத்தும் இலவசமாக பிரசுரிக்கப்படும்

தேவையானவை

  • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
  • உங்கள் முழுப் பெயர்
  • இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
  • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல்

எவ்வாறு தகவல்கள் அனுப்புவது?

  • tamilfrance@hotmail.com என்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
  • புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல் tamilfrance@hotmail.com வழியாக அனுப்பி விடலாம்
  • அறிவித்தலை (தகவல்) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
  • இல்லாவிடின் எமது  இலக்கத்தை கொண்ட whatsup , viber (+33 7 58 02 00 34) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு – பேப்பரின் மேல் பக்கத்தில் இறந்தவரின் பெயரையும் உங்களது மின்னஞ்சல் முகவரியையும் எழுதி விடவும்

பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?

  • கூடியது நீங்கள் தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும். வேலை குறைந்த பட்சத்தில் 30 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது.  பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்
  • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்

 

திருத்தம் செய்வது எப்படி?

  • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்
  • இல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்
  • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்

Terms & Conditions

  • இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
  • அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
  • நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
  • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
  • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
  • அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்
  • நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
  • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்
To Top
error: Alert: Content is protected !!