International
இந்தியா

கோவை மாவட்டத்தில் பெற்ற குழந்தையினின் உறுப்பில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமது குழந்தைக்கு தடுப்பூசி போடும்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி செவிலியர், மருத்துவர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை மருத்துவரிடம் குழந்தையின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 20 ஆம் திகதி மலர்விழி என்ற பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
21 ஆம் திகதி குழந்தைக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் செவிலியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அப்போது முதல் இயல்புக்கு மாறாக நீண்ட நேரம் குழந்தை அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை குழந்தையை குளிப்பாட்ட அழைத்துச் சென்றபோது, குழந்தையின் தொடைப்பகுதியில் ஒன்றரை அங்குலம் அளவுக்கு தென்பட்ட ஊசியை வெளியே எடுத்ததாக பெற்றோர் கூறுகின்றனர்.
இதனையடுத்தே அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள், தடுப்பூசியை போடும்போது அலட்சியமாக செயல்பட்ட செவிலியர், மருத்துவர் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை மருத்துவரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!