Wed. Dec 2nd, 2020

கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் 256 பேர் சாவடைந்துள்ளனர். இதன் மூலம் பிரான்சில் கொரோனத் தொற்றினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கையானது 36.565 ஆக உயரந்துள்ளது. இதில் வைத்தியசாலைகளில் மட்டும் 24.914 சாவடைந்துள்ளனர்.

அதே நேரம் கடந்த 24 மணிநேரத்திற்குள் 49.215 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாளிற்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகமாவது பிரான்சில் உள்ள அனைவரின் உயிரிற்கும் பெரும் ஆபத்தாக அமைய உள்ளது.

இதுவரை 22.153 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.386 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிராபத்தான நிலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

 

share

By Editor

error: Alert: Content is protected !!