Wed. Dec 2nd, 2020

இன்று வெள்ளிக்கிழமை துருக்கியில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, பிரான்ஸ் அவசரகால உதவிகளை வழங்கியுள்ளது. 

கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் சொந்தமான Aegean கடற்பகுதியில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தில் துருக்கி நாட்டுக்குச் சொந்தமான பகுதியில்  *4 பேர் சாவடைந்தும் 120 பேர் காயமடைந்தும் உள்ளனர். இது துருக்கியின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள நிலப்பரப்பாகும். அதைத் தொடர்ந்து, உடனடியாக பிரெஞ்சு அரசு தரப்பில் உதவிகள் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களாக துருக்கி அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் இடையே முறுகல் நிலை நிலவி வருகின்றமை வாசகர்கள் அறிந்ததே. “பிரெஞ்சு ஜனாதிபதியை மனநல காப்பகத்தில் சேர்க்கவேண்டும்!’ என துருக்கிய அரசு அறிவித்ததும், இம்மானுவல் மக்ரோனை பிசாசு போன்று சித்தரித்து ஓவியங்கள் வெளியிட்டதும், பதிலுக்கு பிரான்சின் சார்லி எப்த்தோ பத்திரிகை துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதும் என பலத்த சர்ச்சைகள் எழுந்தன. 

தவிர, பிரான்சின் அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யவேண்டும் என துருக்கிய அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையிலேயே இந்த அவசரகால உதவியினை பிரெஞ்சு அரசு அனுப்பியுள்ளது. 

<<பிரான்ஸ் தனது அனைத்து ஒற்றுமையும் கிரேக்கத்துக்கு, துருக்கிக்கும் தெரிவித்துக்கொள்கிறது.>> என ஐரோப்பிய நல்லிணக்கத்துக்கான  பிரெஞ்சு செயலாளர் Clément Beaune அறிவித்துள்ளார்.

share

By Editor

error: Alert: Content is protected !!