பரிஸ் மாநகர சபையின் மீது வித்தியாசமான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள CANAL DE L’OURCQ நதியில் வசித்து வந்த இரண்டு அன்னப்பறவைகளின் உயிரிழப்புக்கு பரிஸ் நகரசபையே காரணம் என இந்த விநோத வழக்கு பதியப்பட்டுள்ளது. விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான Animaux Zoopolis இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள CANAL DE L’OURCQ நதியில் இரண்டு அன்னப்பறவைகள் கூடுகட்டி வசித்துவந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி முதலாவது அன்னப்பறை சாவடைந்திருந்தது. பின்னர் ஒக்டோபர் 25 ஆம் திகதி இரண்டாவது அன்னப்பறவை சாவடைந்தது.
இவ்விரு அன்னங்களும் சாவடைந்தமைக்கு பரிஸ் நகரசபையின் பொறுப்பற்ற செயலே காரணம் என குறித்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அத்தோடு நகரசபையின் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது.
அன்னப்பறவைகளின் சடலங்களை குப்பையில் வீசியுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறித்த அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.