Sat. Jan 23rd, 2021

ஈஃபிள் கோபுரம் திறக்கப்படும் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஈஃபிள் கோபுரம் திறக்கப்படுவதாக அதன் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த சில வாரங்களுக்கு பகுதி நேரமாக மாத்திரமே ஈஃபிள் கோபுரம் திறக்கப்பட உள்ளதாகவும், காலை 10.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை மாத்திரமே கோபுரம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்ட உள்ளிருப்பு வரும் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்து, அன்றில் இருந்து இரவு நேர உள்ளிருப்பு நடைமுறையில் இருக்கும். இரண்டாம் கட்ட உள்ளிருப்பு காரணமாக ஈஃபிள் கோபுரம் கடந்த சில வாரங்களாக மூட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

share

By Editor

error: Alert: Content is protected !!