Sun. May 9th, 2021

Pantin (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். 

இன்று செவ்வாய்க்கிழமை பகல் 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு Pantin நகரின் rue Rouget-de-Lisle வீதியில் இடம்பெற்றுள்ளது. தனது 10 வயது மகளுடன் தந்தை ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களை நோக்கி இந்த திடீர் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இதில் குறித்த 10 வயது சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்துள்ளார். மருத்துவக்குழு உடனடியாக செயற்பட்டு சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் மூலம் தப்பியோடியுள்ளார். 

காயமடைந்த சிறுமியின் தந்தை தொடர்பாக விசாரித்த போது, அவர் ஒரு சிறைக்கைதி எனவும், ஒருநாள் விடுமுறையில் அவர் தனது வீட்டுக்கு இன்று திரும்பியிருந்தார் எனவும், இந்நிலையிலேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும், துரதிஷ்ட்டவசமாக அவரது மகள் மீது துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் அறிய முடிகிறது. 

share

By Editor

error: Alert: Content is protected !!