Tue. Jun 22nd, 2021

34 வயதுடைய சாரதி ஒருவர் நீண்ட துரத்தலின் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Val-de-Marne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சாரதி  Dreux (Eure-et-Loir) நகரில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில், அங்கு வைத்து உள்ளூர் காவல்துறையினர் அவரை சோதனையிட தடுத்து நிறுத்தியுள்ளனர். Dreux நகரில் இருந்து தப்பி ஓடி அவர் இல் து பிரான்சுக்குள் நுழைந்துள்ளார். 

காவல்துறையினர் குறித்த சாரதியை துரத்தி வந்துள்ளனர். மிக நீண்ட தூரம் பல்வேறு காவல்துறை மகிழுந்துகள் அவரை துரத்தி வந்துள்ள நிலையில், இறுதியாக Créteil  நகர BAC காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சாரதி Limeil-Brévannes (Val-de-Marne) நகரில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஓட்டுனர் உரிமம் இல்லாத குறித்த சாரதி, மது அருந்திவிட்டு மகிழுந்தை செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!