International
இலங்கை

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாதென 2015 ஆம் ஆண்டில் அறிவித்ததாக அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், ஏனையவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் தன்மை உருவாக வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்மி முப்தி தெரிவித்துள்ளார்.

நிதானத் தன்மையையும், நடுநிலையையும் இஸ்லாம் வலியுறுத்துவதாக அவர் கூறினார். ஏனையவர்களை மன்னிக்கும் மனப்பான்மை தனிமனிதனிலிருந்து உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜூம்மா பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற ஜூம்ஆ பிரசங்க நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் என்றும் எதிராகவே செயற்படுகிறது. அப்பாவி உயிர்களை கொலை செய்வதை இஸ்லாம் முழுமையாக தடை செய்திருப்பதாகவும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி சுட்டிக்காட்டினார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்லாத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாதென அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட கூட்டுப் பிரகடனத்தில் அறிவித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!