Sun. May 9th, 2021

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை பார்ப்பதற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் கொண்டு வந்த காற்சட்டை ஒன்றிலிருந்து என சந்தேகிக்கப்படும் சட்ட விரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் எடுத்துச்சென்ற காற்சட்டையின் இடுப்புப் பகுதியில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிராம் 32 மில்லிகிராம் போதைப்பொருளை சிறைச்சாலை உளவுத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

அத்தோடு சந்தேகத்திற்குரிய பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவி என மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும்குறித்த பெண் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

share

By Editor

error: Alert: Content is protected !!