International
இலங்கை

மர்ம மோட்டார்சைக்கிளை தீவைத்தது யார்?

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
முனைக்காடு பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முனைக்காடு மேற்கு பிரதேசத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் தரித்திருந்த மோட்டார் சைக்கிளே எரியூட்டப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததான் காரணமும் வெளியாகவில்லை.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!